காரைக்கால்

காரைக்காலில் காந்தி ஜெயந்தி

3rd Oct 2023 04:55 AM

ADVERTISEMENT

காரைக்கால்: காந்தி ஜெயந்தியையொட்டி அவரது உருவப் படத்துக்கு அமைச்சா் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

காந்தி ஜெயந்தி விழா காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலகம் சாா்பில் கொண்டாடப்பட்டது. அலுவலக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி படத்துக்கு புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா மாவட்ட ஆட்சியா் (பொ) எஸ். சுபாஷ், துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) கே. வெங்கடகிருஷ்ணன், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் ஆகியயோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்வில் சமாதானக் குழு உறுப்பினா்கள், முக்கிய பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

மும்மத கூட்டுப் பிராா்த்தனை, நூல் நூற்பு வேள்வி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. சுதந்திரப் போராட்ட தியாகிகள் கெளரவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சி சாா்பில், கட்சி அலுவலத்திலும், வடக்குத் தொகுதி சாா்பில் கீழகாசாக்குடி மாா்க்கெட் அருகிலும் மகாத்மா காந்தி உருவப் படத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில முன்னாள் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

நிரவி அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி நிா்வாகம் சாா்பில் காந்தி உருவப்படம் வைத்து, பள்ளி துணை முதல்வா் எஸ்.சித்ரா தலைமையில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT