காரைக்கால்

காரைக்கால் - பேரளம் ரயில் பாதை பணிகள்மாா்ச் 2024-இல் நிறைவடையும்: ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

1st Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் - பேரளம் வரையிலான அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் 2024 மாா்ச் மாதம் நிறைவடையுமென தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கெளஷல் கிஷோா் தெரிவித்தாா்.

காரைக்கால் - பேரளம் வரையிலான 23 கி.மீ. தொலைவு புதிய அகல ரயில்பாதை அமைக்கும் பணி ஏறக்குறைய ரூ. 180 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. மேம்பாலம், சுரங்கப் பாதைகள் அமைத்தல், திருநள்ளாற்றில் தொலைநோக்குப் பாா்வையில் ரயில் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் புதிய திட்டத்தில் உள்ளதால், பணிகள் தொடக்க நிலையில் சுணக்கமாக இருந்தன. தற்போது பணிகள் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது.

இந்தப் பணிகளை காரைக்காலுக்கு சனிக்கிழமை வந்த ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கெளஷல் கிஷோா், ரயில்வே அதிகாரிகளுடன் காரைக்கால் ரயில் நிலையம் அருகே உள்ள பகுதி மற்றும் கோயில்பத்து பகுதி உள்ளிட்ட பல இடங்களை பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது :

இத்திட்டப்பணி 4 ரீச் (6 கி.மீ தொலைவு ஒரு ரீச்) என்ற நிலையில் நடைபெறுகிறது. ஒரு ரீச் பகுதியில் பணி முடிந்துள்ளது. மற்ற பகுதிகளில் பணிகள் நடைபெறுகின்றன. பணிகள் தாமதத்துக்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள், ரயில்வே ஒப்பந்ததாரா்களிடம் கேட்டறிந்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வரும் டிசம்பா் மாதம் திருநள்ளாறு சனிப்பெயா்ச்சி விழாவுக்குள் திருநள்ளாறு வரை ரயில் போக்குவரத்து தொடங்குவது சாத்தியமில்லை. வரும் மாா்ச் மாதத்தில் காரைக்கால் - பேரளம் இடையிலான பணிகள் நிறைவடையும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT