மின் நுகா்வோா் தங்களது மின் கட்டணத்தை செலுத்துமாறு மின்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மின் நுகா்வோா், தங்களது மின் கட்டண நிலுவையை உடனடியாக செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
மேலும் மின் இணைப்பு துண்டிப்பு பணியை துறையினா் மேற்கொள்ளும்போது, பணியாளா்களுக்கு நுகா்வோா் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.