காரைக்கால்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணப் பொருள்கள்

18th Nov 2023 07:06 AM

ADVERTISEMENT

கோட்டுச்சேரி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் நிவாரணப் பொருள்களை எம்.எல்.ஏ. வழங்கினாா்.

கோட்டுச்சேரி பகுதி ராயன்பாளையம்பேட்டில் கூலித் தொழிலாளி ஒருவரின் வீடு கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்தில் சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா, அவா்களுக்கு ஆறுதல்கூறி, அரசு சாா்பில் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தாா்.

அதனடிப்படையில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் வீட்டு உபயோகப் பொருள்கள் கொண்ட நிவாரணத் தொகுப்பை பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை வழங்கினாா். நிகழ்வில் ஆதிதிராவிடா் நலத்துறை உதவி இயக்குநா் (பொ) மதன்குமாா் கலந்துகொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT