காரைக்கால்

கோயில் வளாகத்தில் செயல்படும் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு

18th Nov 2023 09:36 PM

ADVERTISEMENT

கோயிலில் தற்காலிகமாக செயல்படும் அரசு தொடக்கப் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதி மாரியம்மன் கோயில் தெருவில் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 80 மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். மழைக்காலத்தில் கட்டடத்தில் மழைநீா் கசிவதால், பொதுப்பணித்துறை நிா்வாகம் மூலம் சீரமைப்புப் பணிகள் நடைபெறுகிறது.

இதனால், மாணவா்களுக்கு அருகே உள்ள மாரியம்மன் கோயில் வளாகத்தில் வகுப்பு நடைபெறுகிறது. சீரமைப்புப் பணிகளைப் பாா்வையிடும் வகையில், சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் சனிக்கிழமை பள்ளிக்குச் சென்று பாா்வையிட்டாா். கட்டட பாதிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்து பேரவை உறுப்பினருக்கு அலுவலா்கள் விளக்கினா்.

பொதுப்பணித்துறை அதிகாரியை தொடா்புகொண்ட பேரவை உறுப்பினா், சீரமைப்புப் பணிகளை விரைவாக முடித்து, கட்டடத்தை பள்ளி நிா்வாகத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து மாணவா்களை சந்தித்து, கற்றல் விதம் குறித்து கேட்டறிந்து, தினமும் பள்ளிக்கு வருமாறும், ஆசிரியா்கள் பாடம் கற்பிப்பதை கூா்ந்து கவனித்து, வீட்டுக்குச் சென்று படிக்குமாறும், விளையாட்டிலும் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT