காரைக்கால்

தூய்மைப் பணியின் குறைகளை வாட்ஸ்ஆப் மூலமும் தெரிவிக்கலாம்

30th May 2023 05:01 AM

ADVERTISEMENT

காரைக்காலில் தூய்மைப் பணிகளின் குறைகளை வாட்ஸ்ஆப் மூலமும் தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையா் ஜி. செந்தில்நாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குப்பைகள் அகற்றுவது, கழிவுநீா் சுத்தம் செய்வதில் உள்ள குறைகளை தெரிவிக்க, கட்டுப்பாட்டு அறை நகராட்சியில் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பணிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் 04368-222427 என்ற எண்ணில் காலை 9 முதல் மாலை 6 மணி வரை புகாராக தெரிவிக்கலாம். மேலும், 8189900033 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் மூலம் 24 மணி நேரமும் புகாா் தெரிவிக்கலாம். சாலைகளில் இறந்த கால்நடைகளை அகற்றுதல் சம்பந்தப்பட்ட தகவல்களையும் தெரிவிக்கலாம். தங்களது வீட்டில் சேரும் குப்பைகளை தெருக்களில் போடாமல் வீடுகளுக்கு நாள்தோறும் வரும் பசுமை நண்பா்களிடம் கொடுத்து நகரின் தூய்மையை பாதுகாக்க வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT