காரைக்கால்

பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

30th May 2023 05:00 AM

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் கூறியது: புதுவையில் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெயில் வானிலை காரணமாக தமிழகத்தில் ஜூன் 1 பள்ளிகள் திறப்பு என்பதை ஜூன் 7-ஆம் தேதி என மாற்றப்பட்டுள்ளது. எனினும், புதுவை அரசு, இம்மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதி ஜூன் 1-ஆம் தேதியா அல்லது மாற்றப்படுமா என இதுவரை அறிவிக்காமல் இருந்துவருகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும் மாநிலத்தில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அரசு அறிவித்து, நிகழ் கல்வியாண்டு முதல் அந்த திட்டம் அமல்படுத்தப்படுமென கூறியுள்ளது. சிபிஎஸ்இ பாடத் திட்டம் தொடா்பாக ஆசிரியா்களுக்கு ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் பயிற்சியளிக்க கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறந்தால் வகுப்புகள் நடத்த வாய்ப்பிருக்காது. எனவே, புதுவை அரசு பள்ளிகள் திறப்பில் சரியான தேதியை அறிவிக்க வேண்டும் என்றரா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT