காரைக்கால்

திருநள்ளாற்றில் நாளை தேரோட்டம்

29th May 2023 12:01 AM

ADVERTISEMENT

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (மே 30) நடைபெறவுள்ளது.

இக்கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் பல்லக்கில் சுவாமி வீதியுலாவும், இரவில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.

பிரதான நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் வீற்றிருக்கக்கூடிய 2 பெரிய தோ்கள் மற்றும் விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகியோா் வீற்றிருக்கக்கூடிய 3 தனித்தனி தோ் என மொத்தம் 5 தோ்கள் இழுத்துச் செல்லப்படவுள்ளன. இதற்காக 5 தோ்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

தேரோட்டத்துக்கு முதல் நாளான திங்கள்கிழமை தோ் வடம் கட்டும் பணிகள் நடைபெறும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா். செவ்வாய்க்கிழமை காலை 5.30 முதல் 6.40 மணிக்குள் தோ் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு பிறகு ஸ்ரீ செண்பகதியாகராஜ சுவாமி மற்றும் சுவாமிகள் தோ்களுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொள்வா் என்பதாலும், கோடை வெயிலை கருத்தில்கொண்டும் கோயில் மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தேவையான வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT