காரைக்கால்

ரேஷன் அரிசி கடத்தல் புகாா்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

DIN

தமிழகத்திலிருந்து காரைக்காலுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசி சட்டவிரோதமாக அரசுப் பேருந்து மற்றும் வாகனங்களில் காரைக்கால் பகுதிக்கு கடத்தப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்திலிருந்து காரைக்காலுக்கு புதுச்சேரி அரசுப் பேருந்தில் அரிசி மூட்டைகள் சட்டவிரோதமாக எடுத்துவரப்படுவதாக நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. அவா், அந்த பேருந்தை திருப்பட்டினம் பகுதியில் நிறுத்தி சோதனையிட்டபோது அரிசி மூட்டைகள் இருந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகத்துக்கு பேரவை உறுப்பினா் பரிந்துரை செய்துள்ளாா். காரைக்காலில் இருந்து மதுபானம் தமிழகத்துக்கு தாராளமாக கடத்தப்படும் நிலையில், அங்கிருந்து தாராளமாக ரேஷன் அரிசி காரைக்கால் பகுதிக்கு கடத்தப்படுவதாகவும், தீவிரமாக கண்காணித்து இதை தடுக்க அந்தந்த மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT