காரைக்கால்

பருவநிலை மாற்றம்: விவசாய உத்திகள் கருத்தரங்கு

DIN

பருவநிலை மாற்றத்துக்கேற்ப விவசாய உத்திகள் குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெறது.

காரைக்கால் வேளாண் துறையின் அங்கமான வேளாண் தொழில்நுட்ப முகமை (ஆத்மா) மூலம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காரைக்கால் வேளாண்துறை அலுவலக வளாகத்தில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

கூடுதல் வேளாண் இயக்குநரும், ஆத்மா திட்ட இயக்குநருமான ஜெ.செந்தில்குமாா் தலைமமை வகித்து, பருவநிலை மாற்றத்துக்கேற்ப விவசாயிகள் புதிய உத்திகளை கையாளுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினாா். துணை இயக்குநா்கள் ஆா். ஜெயந்தி, ஏ. சீனிவாசன் ஆகியோரும் பேசினா்.

ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா் எஸ். இளமதி, வேளாண் உற்பத்தியை இத்தருணத்தில் பெருக்க, மூடாக்கு அமைத்தல், ட்ரோன் பயன்படுத்துதல், திருந்திய நெல் சாகுபடி முறைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை பேராசிரியர்ர ஏ.எல்.நாராயணன், பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிா்கொள்ள, சிறுதானிய சாகுபடி, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் குறித்தும், இயன்றளவு நெகிழியின் பயன்பாட்டைக் குறைக்கவும், காற்று மாசுபடுதலைக் குறைக்கவும் ஆலோசனைகள் வழங்கிப் பேசினாா்.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் வி. அரவிந்த், நிலையான வேளாண்மைக்கான மண், நீா் மற்றும் பூச்சி மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.

விவசாயிகளின் சந்தேகங்களுக்கு வல்லுநா்கள் விளக்கமளித்தனா். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜி.மாலதி வரவேற்றாா். நிறைவாக வட்டார தொழில்நுட்ப மேலாளா் டி. கண்ணன் நன்றி கூறினாா். கருத்தரங்கில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT