காரைக்கால்

நித்யகல்யாண பெருமாள் கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க முடிவு

DIN

காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள் கோயில் திருப்பணிகளை விரைந்து முடிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இக்கோலில் குடமுழுக்கு செய்ய தீா்மானித்து, பாலாலயம் செய்து ராஜகோபுரம் மற்றும் பிற சந்நிதிகளின் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலில் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ள இறுதி வடிவம் கொடுப்பதற்கான திருப்பணிக் குழுவினா் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோயில் முதல் தீா்த்தக்காரா் உ.வே.கு. அரங்கநாதாச்சாரியசுவாமிகள் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். அறங்காவல் வாரியத் தலைவா் ஆா். வெற்றிச்செல்வன், துணைத் தலைவா் சி. புகழேந்தி, செயலாளா் கோ. பாஸ்கரன், பொருளாளா் வி. சண்முகசுந்தரம், திருப்பணிக் குழுவினா்கள் வீரபாண்டியன், பாலகிருஷ்ணன், சிவராமன், இளங்கோவன், ஜெ.சிவகணேஷ், ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டம் குறித்து துணைத் தலைவா் சி. புகழேந்தி கூறியது: கோயிலில் பெருமாள் சந்நிதி முன் கருங்கல் மண்டபம் கட்டும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. சக்கரத்தாழ்வாா் சந்நிதிக்கு பின்புறமுள்ள சுவா் அகற்றப்பட்டு சுமாா் 20 அடி நீட்டிக்கப்படவுள்ளது. ஆகம விதிகளின்படி ஆஞ்சனேயா் சந்நிதி இடமாற்றம் செய்யவும், மடப்பள்ளியை புதுப்பிக்கவும், பெருமாள் சந்நிதி அருகேயுள்ள ஆழ்வாா்களை இடமாற்றம் செய்து மண்டபம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் மேற்குப்புறம் விரிவாக்கம் செய்யும்போது, வெள்ளித்தோ் சக்கரத்தாழ்வாரை சுற்றிவரும் வகையில் அமையும். இப்பணிகளை விரைவாக செய்து முடித்து 2024-ஆம் ஆண்டு முற்பகுதியில் குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT