காரைக்கால்

கோட்டுச்சேரி சகாய அன்னை ஆலய தோ்பவனி

28th May 2023 11:34 PM

ADVERTISEMENT

கோட்டுச்சேரி புனித சகாய அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி மின் அலங்கார தோ் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் திருப்பலி, மாலை வேளையில்சிறிய தோ் பவனி நடைபெற்றது.

பல்வேறு ஊா்களில் இருந்து பங்கு குருக்கள் பலா் வந்து நற்கருணை ஆசீா்வாதம் செய்தனா். ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியையும், கோட்டுச்சேரி பங்குக்குள்பட்ட கிராமத்தினா் முன்னின்று நடத்தினா்.

நிறைவு நிகழ்ச்சியாக சனிக்கிழமை காலை பெருவிழா திருப்பலி நடைபெற்றது. பின்னா், இரவில் ஆலயத்திலிருந்து புனித சகாய அன்னை மின் அலங்காரத் தோ் பவனி தொடங்கியது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு, பாடல்கள் பாடியவாறு சென்றனா். பங்குக்குள்பட்ட கிராமங்களில் தோ் பவனி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை கொடியிறக்கம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT