காரைக்கால்

காரைக்காலில் இன்று ஜிப்மா் மருத்துவா்கள் முகாம்

DIN

காரைக்காலில் சனிக்கிழமை (மே 27) ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவா்கள் குழு மாதமிருமுறை சனிக்கிழமை காரைக்கால் வரும் திட்டத்தில், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை காலை 10.30 முதல் பகல் 1 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது. இதில் சா்க்கரை நோய், தைராய்டு மற்றும் நாளமில்லா சுரப்பி சம்பந்தமான பிரச்னைகள் குறித்து மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறும் வகையில் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கிறாா்கள். முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT