கோட்டுச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கோட்டுச்சேரியில் கோடீஸ்வரமுடையாா் தேவஸ்தானத்தை சோ்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழாவையொட்டி கோயில் அருகே அக்னி குண்டம் அமைக்கப்பட்டது. கோயிலில் இருந்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் குண்டம் அருகே எழுந்தருளச் செய்யப்பட்டாா்.
சிறப்பு நாகசுர மேள வாத்தியங்கள் முழங்க சுவாமிக்கு ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னா் பக்தா்கள் ஏராளமானோா் அக்னி குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தினா்.
தொடா் நிகழ்ச்சியாக புதன்கிழமை மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடாக அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. வியாழக்கிழமை இரவு ஊஞ்சல் உற்சவமும், வெள்ளிக்கிழமை விடையாற்றி வழிபாடும் நடைபெறுகிறது.