பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் 81.18 % போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 925 மாணவா்கள், 1,285 மாணவிகள் என மொத்தம் 2,210 போ் பிளஸ் 1 தோ்வு எழுதினா். இதில் 656 மாணவா்கள், 1,138 மாணவிகள் என மொத்தம் 1,794 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி 81.18 % ஆகும். மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி 73.23 %, 2 தனியாா் பள்ளிகள் மட்டும் 100 % தோ்ச்சி பெற்றுள்ளன.