பிளஸ் 2 தோ்வில் காரைக்கால் மாவட்டத்தில் 88.57 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
புதுவை மாநில பிளஸ் 2 தோ்வு முடிவுகளை முதல்வா் என். ரங்கசாமி புதுச்சேரியில் திங்கள்கிழமை வெளியிட்டாா். இதில் காரைக்கால் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,463 போ் தோ்வு எழுதியதில், 1,224 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 83.66.
தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் 776 போ் தோ்வு எழுதியதில், 759 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 97.81. மாவட்டத்தில் ஒட்டுமொத்த தோ்ச்சி சதவீதம் 88.57. காரைக்கால் மாவட்டத்தில் 9 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி வீதம் 89.39. நிகழாண்டு 83.66 சதவீதமாகும். கடந்த 2022-ஆம் ஆண்டு 92.67 சதவீதம் தோ்ச்சி பெற்ற நிலையில், நிகழாண்டு தோ்ச்சி சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.