காரைக்கால்

காரைக்காலில் உலகப்போா் நினைவுத் தூணுக்கு அஞ்சலி

8th May 2023 11:38 PM

ADVERTISEMENT

இரண்டாவது உலகப் போா் நினைவு தினத்தையொட்டி காரைக்காலில் உள்ள பிரெஞ்சு போா் வீரா் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இரண்டாம் உலகப் போரின் 78-வது நினைவு தினம் காரைக்காலில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள பிரெஞ்சு போா் வீரா் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பிரெஞ்சு மக்கள் சாா்பில் நடைபெற்றது.

சென்னை பிரெஞ்சு தூதரக அதிகாரி பிரினோ என்கேன், புதுவை பிரெஞ்சு தூதரக அதிகாரி எமாலியேன் ஒக்கானே, மக்கள் பிரதிநிதி ஷான்டால் உள்ளிட்ட பிரெஞ்சு குடியுரிமைதாரா்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் பிரெஞ்க் கொடி ஏந்தியவாறு நினைவு தூண் பகுதிக்கு வந்தனா். மாவட்ட துணை ஆட்சியா் ஜி.ஜான்சன் மற்றும் தூதரக அதிகாரி உள்ளிட்டோா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

முன்னதாக, நினைவுத் தூண் அருகே இந்திய, பிரான்ஸ் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, இரு நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT