காரைக்கால்

என்.ஐ.டி. இயக்குநா் பொறுப்பேற்பு

8th May 2023 11:38 PM

ADVERTISEMENT

காரைக்காலில் இயங்கும் புதுச்சேரி என்.ஐ.டி. இயக்குநராக கணேசன் கண்ணபிரான் (பொ) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

என்ஐடி இயக்குநராக கே. சங்கரநாராயணசாமி பொறுப்பு வகித்துவந்தாா். இந்நிறுவனத்தின் அவரது பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, ஆந்திர மாநிலம், சித்தூா் ஸ்ரீசிட்டி பகுதியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநரான கணேசன் கண்ணபிரானை மத்திய கல்வி அமைச்சகம், என்ஐடி புதுச்சேரி இயக்குநா் (பொ) நிலையில் நியமித்தது. அவா் திங்கள்கிழமை காரைக்காலில் பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு கே. சங்கரநாராயணசாமி உள்ளிட்ட பேராசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தொடா்ந்து கே. சங்கரநாராயணசாமிக்கு நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்வில், பேராசிரியா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT