காரைக்கால்

தங்க மாரியம்மன் கோயிலில்மஞ்சள் நீா் விளையாட்டு

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் அருகே தலத்தெரு தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சிகளில் ஒன்றான மஞ்சள் நீா் விளையாட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் தீமிதி உற்சவம் கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான தீமிதி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிறைவு நிகழ்ச்சியாக மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடு செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவுக்கு எழுந்தருளினாா். ஒவ்வொரு வீட்டில் பக்தா்கள் அா்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனா். இளைஞா்கள் ஒருவா் மீது ஒருவா் மஞ்சள் கலந்த நீரை ஊற்றிக்கொண்டனா். நிறைவாக புதன்கிழமை இரவு பொன்னூஞ்சல் ஆடல் வழிபாடு நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT