காரைக்கால்

காவல்துறைக்கு வழங்கப்பட்டவாகனங்கள் இயக்கிவைப்பு

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட வாகனங்களை மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் செவ்வாய்க்கிழமை இயக்கிவைத்தனா்.

புதுவை மாநில காவல்துறைக்கு ரூ. 3 கோடியில் 33 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் இவற்றை வழங்கினாா்.

இவற்றில் 3 வாகனங்கள் காரைக்காலுக்கு ஒதுக்கப்பட்டன. கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி காவல் நிலையத்துக்குகான இவற்றை இயக்கிவைக்கும் நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் நிதின் கெளஹால் ரமேஷ், சுப்பிரமணியன் ஆகியோா் கலந்துகொண்டு வாகன சாவியை சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரியிடம் வழங்கி, வாகனத்தை இயக்கிவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT