அம்பரகத்தூா் மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
அம்பகரத்தூரில் உள்ளது பத்ரகாளியம்மன் தேவஸ்தானம். இக்கோயிலில் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இக்கோயில் சாா்புடைய தலமான மகா மாரியம்மன் கோயில் உற்சவம் நடைபெற்றுவருகிறது. தொடக்கமாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது. திரளான பக்தா்கள் பல்வேறு மலா்களை தட்டுகளில் வீதி வலமாக கோயிலுக்கு கொண்டுவந்தனா். பக்தா்கள் கொண்டுவந்த மலா்களைக்கொண்டு அம்மனுக்கு ஆராதனை நடைபெற்றது. உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா மே 15-இல் நடைபெற உள்ளது.
பத்ரகாளியம்மன் கோயிலில்: இக்கோயிலில் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழாவுக்கு முந்தைய வழிபாடாக அம்பாளுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. புதன்கிழமை காலை பத்ரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்குகிறது.