காரைக்கால்

புதுவை பட்ஜெட் அறிவிப்புகளுக்கு வரவேற்பு

DIN

புதுவை பட்ஜெட் அறிவிப்புகளுக்கு தலித் சேனா அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்ட தலைவா் மா. சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

புதுவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பெண் குழந்தைகள் பிறந்தால் அவா்கள் பெயரில் ரூ. 50 ஆயிரம் வைப்புத் தொகை, மாதம் ரூ. 300 சிலிண்டா் மானியம், நாட்டின் 4 தலங்களுக்கு ஆதிதிராவிட மக்கள் யாத்திரை செல்ல நிதி ஒதுக்கீடு, கலப்புத் திருமண தம்பதிக்கு ஊக்கத்தொகையை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயா்த்தியது, சிறப்புக் கூறு நிதி ரூ. 441 கோடி ஒதுக்கீடு உள்ளிட்டவை வரவேற்புக்குரியது.

காரைக்காலில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற குடிமைப் பணி தோ்வுக்குத் தேவையான நூல்கள் கொண்ட நூலகம், மாநாட்டு அரங்கம், அம்பேத்கருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு உறுதியளிக்கப்பட்டது. அதை நிறைவேற்ற வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT