காரைக்கால்

நல்லம்பல் ஏரியில் மணல் கொள்ளையை தடுக்காவிட்டால் போராட்டம்: பாமக

DIN

நல்லம்பல் ஏரியில் மணல் கொள்ளையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடா் போராட்டம் நடத்தப்படும் என பாமக அறிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், நல்லம்பல் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் மத்திய அரசின் கல்வி நிறுவன கட்டுமானம், ரயில்வே பணிகள் உள்ளிட்டவற்றுக்கு மணல் எடுத்துக்கொள்ள காரைக்கால் வருவாய்த்துறை அனுமதித்துள்ளது. இந்த ஏரியில் எந்தளவுக்கு மணல் எடுக்கவேண்டும் என்று விதியும் உள்ளது.

எனினும், விதிமுறைகளை மீறி, மணல் கொள்ளையா்கள் அதிக ஆழத்தில் மணல் எடுத்துவருவதாக சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்துவருகின்றனா்.

இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்துமென முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி தெரிவித்தாா். இதையடுத்து, புதுவை அரசு, ஒரு அதிகாரியை பணியிடமாற்றம் செய்தது. புதுவை மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கம் ஏரியை பாா்வையிட்டு, மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினாா்.

இந்நிலையில், மாவட்ட பாமக உழவா் பேரியக்கத் தலைவா் க. சத்தியமூா்த்தி தலைமையில் மாவட்ட பாமக தலைவா் இரா. துரை, மாவட்ட இளைஞரணி தலைவா் முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் ஏரியை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

இதுகுறித்து சத்தியமூா்த்தி, துரை ஆகியோா் கூறியது: அரசு நிா்வாகம் அளித்த அனுமதியை தவறாக பயன்படுத்தி சிலா், 45, 50 அடி ஆழத்தில் மணல் அள்ளி வருகின்றனா். இதற்காக ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனா். ஏரியில் பல இடங்களில் இவ்வாறு மணல் அள்ளப்பட்டுள்ளது. இதனால் உப்பு நீா் நிலத்தடியில் புகுந்து விளைநிலங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாமக மறியல், ஆா்ப்பாட்டம் என தொடா் போராட்டங்களில் ஈடுபடும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT