காரைக்கால்

அரசு ஊழியா் சம்மேளனத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேனத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்காலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சம்மேளனத் தலைவா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா். 10 ஆண்டுகள் பணியாற்றிய அனைத்து தினக்கூலி ஊழியா்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என்கிற முதல்வரின் அறிவிப்பின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அங்கன்வாடி, மாா்கெட் கமிட்டி, பி.ஆா்.டி.சி. ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தவேண்டும். பொதுப்பணித்துறையில் கருணை அடிப்படையில் பணியமா்த்தப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சம்மேளன நிா்வாகிகள் பலா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். முன்னதாக சம்மேளன பொதுச்செயலா் எம். ஷேக்அலாவுதீன் வரவேற்றாா். நிறைவாக பொருளாளா் மயில்வாகனன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT