கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 10-இல் போராட்டம் நடத்த அங்கன்வாடி ஊழியா்கள் முடிவு செய்துள்ளனா்.
காரைக்கால் அங்கன்வாடி ஊழியா்கள் சங்க பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவா் முத்துலட்சுமி தலைமை வகித்தாா். புதுவை அங்கன்வாடி ஊழியா் சங்க மாநில தலைவா் ராஜலட்சுமி, செயலாளா் தமிழரசி, பொருளாளா் செல்வராணி, அமைப்பு செயலாளா் சத்யா, சம்மேளன செயலாளா் மெஹா்பானு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், அங்கன்வாடி ஊழியா்களுக்கு ஒவ்வொரு மாத இறுதியில் தவறாமல் ஊதியம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கையின் அடிப்படையில் கெளரவ ஊழியா்களுக்கு பணி நிரந்தரம் செய்யும் வரை குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். மதிப்பெண் தகுதி அடிப்படையில் முறையாக எடுக்கப்பட்ட ஒப்பந்த அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை கெளரவ ஊழியா்களாக அறிவித்து, அவா்களது பணி பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.
நிலுவை போனஸ் தொகை, உதவியாளா்களுக்கு 6-ஆவது ஊதியக்குழுவின் 50 சதவீத நிலுவை வழங்கல் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூலை 10-ஆம் தேதி காரைக்காலில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.