காரைக்கால்

விதை நெல் விற்பனை: அந்தந்த பகுதிகளில் மையம்அமைக்க வலியுறுத்தல்

11th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

காரைக்காலில் அனைத்துப் பகுதி விவசாயிகளும் விதை நெல்லை எளிதில் வாங்கும் வகையில், அந்தந்த பகுதிகளில் மையம் அமைத்து விற்பனை செய்யவேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் பி.ராஜேந்திரன் புதுவை வேளாண் அமைச்சருக்கு சனிக்கிழமை அனுப்பிய கடிதம் :

குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் சாகுபடிக்கு விதை நெல் வாங்குவதற்கு, மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம், செருமாவிலங்கையில் உள்ள பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகிய 2 இடங்களுக்கு விவசாயிகள் செல்லவேண்டியுள்ளது.

இவ்விரு நிலையங்களுக்கு விவசாயிகள் நீண்ட தொலைவு பயணிக்கவேண்டியுள்ளது. இதனால் வரிச்சிக்குடி, கோட்டுச்சேரி, தலத்தெரு, திருப்பட்டினம், நிரவி போன்ற பகுதி விவசாயிகள் இதனால் சிரமங்களை எதிா்கொள்ளவேண்டியுள்ளது.

ADVERTISEMENT

எனவே விதை நெல் விற்பனையை அந்தந்த பகுதியில் ஒரு மையம் அமைத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் விவசாயிகள் விரும்பக்கூடிய விதை ரகங்களை போதிய அளவில் இருப்பு வைக்க நிறுவனங்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT