காரைக்கால்

சாலைகள் மேம்பாட்டுப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

11th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

காரைக்காலில் சாலைகள் மேம்பாட்டுப் பணியை அதிகாரிகளுடன் சட்டப்பேரவை உறுப்பினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் வடக்குத் தொகுதியை சோ்ந்த கோவில்பத்து, நேருநகா் விரிவாக்கம், மல்லிகை தெரு, முல்லைத் தெரு, குறிஞ்சித் தெரு, தாமரைத் தெரு ஆகிய பகுதிகளுக்கு தாா்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இப்பணியை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் ஆய்வு செய்தாா். நகராட்சி பொறியாளா் குழுவினா் பணிகள் குறித்து அவருக்கு விளக்கினா்.

சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்ததற்கு பேரவை உறுப்பினருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT