காரைக்கால்

ரெடிமேட் கடையில்பணம் தராமல் கத்தியை காட்டிமிரட்டிய சம்பவம்: போலீஸாா் விசாரணை

11th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ரெடிமேட் கடையில் துணிக்கான பணத்தை கொடுக்காமல், கத்தியை காட்டி மிரட்டிவிட்டு, காரில் தப்பிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரைக்கால் பாரதியாா் சாலையில் உள்ள ஒரு ரெடிமேட் கடைக்கு வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 8.30 மணியளவில் காரில் வந்த 3 போ், பேண்ட், சட்டை வாங்கியுள்ளனா். இதற்கான தொகை ரூ. 2,500-க்கு ரசீதை கடை மேலாளா் முகமது அயூப் அவா்களிடம் அளித்துள்ளாா்.

மூவரில் ஒருவா் பணம் கொடுக்காமல் வெளியேறிவிட்டாராம். மற்ற இருவரிடம் பணம் கேட்டபோது, இணையவழியில் (ஜி-பே) செய்வதாக கூறினாா்களாம். ஆனால், பணத்தை கொடுக்காமல் இருவரும் காரில் ஏறியுள்ளனா்.

கடை மேலாளா் அவா்களிடம் பணம் கேட்டபோது, கத்தியை காட்டி மிரட்டிவிட்டு, காரை வேகமாக இயக்கிக்கொண்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

கடை மேலாளா், காரின் எண்ணை பதிவு செய்து, காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, போலீஸாா் மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT