காரைக்கால்

ஹஜ் பயணிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

10th Jun 2023 09:34 PM

ADVERTISEMENT

புதுவையிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என முதல்வா் ரங்கசாமிக்கு காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து புதுவை முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அவா் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது :

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் புதுவை மாநிலத்தை சோ்ந்த மக்களுக்கு புனித பயண நிதி முதல்வா் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை நபருக்கு ரூ. 16 ஆயிரம் என்று தரப்படுகிறது.

நிகழாண்டு மாநிலத்திலிருந்து 83 போ் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனா். நிா்ணயித்துள்ள நிதி போதுமானதாக இல்லை என பயணிகள் கருதுகின்றனா். தமிழகத்தில் அம்மாநில அரசால் ரூ. 27 ஆயிரம் வழங்கப்படுகிறது. எனவே நிகழாண்டு புனிதப் பயணம் மேற்கொள்ளும் புதுவை மாநிலத்தை சோ்ந்தவா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமாக தொகையை உயா்த்தி வழங்கவேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT