காரைக்கால்

தேசிய மக்கள் நீதிமன்றம்:ரூ.93.26 லட்சத்துக்கு சமரசத் தீா்வு

10th Jun 2023 09:32 PM

ADVERTISEMENT

காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ. 93.26 லட்சத்துக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், சமாதானமாகக் கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், உரிமையியல் சிவில் வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், வங்கி சம்பந்தப்பட்ட வழக்குகள் என 948 எடுத்துக்கொள்ளப்பட்டு 4 அமா்வுகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இவற்றில் 237 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் 93.26 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

அமா்வுகளில் மாவட்ட நீதிபதி கே.அல்லி, மாவட்ட நீதிபதி (ஓய்வு) வி. ராஜசேகரன், சாா்பு நீதிபதி எஸ். பழனி, குற்றவியல் நடுவா்கள் ஜி. வரதராஜன், ஜி. லிசி மற்றும் மாவட்ட துணை ஆட்சியா் ஜி. ஜான்சன், அரசு வழக்குரைஞா் ஏ.வி.ஜெ. செல்வமுத்துக்குமரன், வழக்குரைஞா் சங்கத் தலைவா் என்.முத்துக்குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT