காரைக்காலில் ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினத்தை கொண்டாடப்படுவது குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் ஆட்சியரகத்தில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிறப்பான முறையில் யோகா தினத்தை காரைக்கால் மாவட்டத்தில் கொண்டாடுவதற்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யுமாறு அரசுத்துறையினருக்கு ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா்.
மாவட்ட துணை ஆட்சியா்கள் ஜான்சன், எஸ். பாஸ்கரன், ஆட்சியா் (பயிற்சி) சம்யக் எஸ். ஜெயின், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், கல்வித்துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, நலவழித்துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.