காரைக்கால்

மீன்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு மீன்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் சத்து மாவு தயாரிப்பு குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியுடன் அட்டவணை இன துணை திட்டத்தின்கீழ், அறிவியல் நிலைய முதல்வா் சீ.ஜெய்சங்கா் வழிகாட்டலில், அட்டவணை இன மகளிா் சுய உதவிக்குக் குழு உறுப்பினா்களுக்கு 2 நாள் பயிற்சி புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் மதிவாணன், மீனிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு தொழில்நுட்ப உரை மற்றும் செயல்விளக்கம் அளித்தாா். மேலும் மீன் அறுவடைக்குப்பின் பதப்படுத்தும் முறைகள், மதிப்பு கூட்டுதல் தயாரிப்பு பொருட்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள் ஆகியவற்றை விளக்கினாா்.

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மனையியல் துறை உதவிப் பேராசிரியா் அதியமான் சத்து மாவு தயாரிப்பு பயிற்சி மற்றும் செயல் விளக்கம் அளித்தாா்.

ADVERTISEMENT

சிறுதானிய ஆண்டின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் சிறு தானியங்களை பெருமளவில் உட்கொள்ளவேண்டும், அந்த வகையில் சத்து மாவு அனைத்து தானியங்களின் கலவையாகவும் அனைத்து வயதினரும் உட்கொள்ள ஏற்றது என்றாா்.

முன்னதாக பயிற்சியை வேளாண் அறிவியல் நிலைய கால்நடை தொழிநுட்ப வல்லுநா் மருத்துவா் பா.கோபு தொடங்கிவைத்தாா். வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனா் ஆ.செந்தில் உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT