காரைக்கால்

காரைக்காலில் வீடு தீக்கிரை

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் அருகே வியாழக்கிழமை மாலை ஏற்ப்டட தீ விபத்தில் வீடு தீக்கிரையானது.

காரைக்கால் மாவட்டம், மேலஓடுதுறை பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி ஆனந்த் என்பவரது வீட்டில் வியாழக்கிழமை மாலை

திடீரென தீப்பற்றியது. அருகிலிருந்தோா் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். பின்னா் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

எனினும் வீடு முழுமையாக சேதமடைந்தது. வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகின. இதுகுறித்து நிரவி காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT