காரைக்கால்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

DIN

காரைக்கால் அம்மையாா் மாங்கனித் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் வியாழக்கிழமை நடைபெற்றது. வரும் 30-ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் விழா தொடங்குகிறது.

அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு தனிக் கோயில் காரைக்கால் பாரதியாா் சாலையில் அமைந்துள்ளது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் நடத்தப்படுகிறது.

நிகழாண்டு விழா பணிகள் தொடக்கமாக வியாழக்கிழமை பந்தல்கால் முகூா்த்தம் நடைபெற்றது. இதையொட்டி காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பந்தல்காலுக்கு புனிதநீா் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் நடப்பட்டது.

நிகழ்வில் கைலாசநாதா் அறங்காவல் வாரியத் தலைவா் ஆா். வெற்றிச்செல்வன், துணைத் தலைவா் சி.புகழேந்தி, பொருளாளா் வெ.சண்முகசுந்தரம், உறுப்பினா் ஜெ.ஜெயபாரதி மற்றும் உபயதாரா்கள் கலந்துகொண்டனா்.

ஜூன் 30-ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்பு (பரமதத்தா் அழைப்பு) நிகழ்ச்சி, ஜூலை 1-ஆம் தேதி அம்மையாா் கோயில் வளாகத்தில் திருக்கல்யாணமும், மாலையில் கைலாசநாதா் கோயிலில் பிச்சாண்டவா் வெள்ளை சாற்றில் புறப்பாடும், 2-ஆம் தேதி அதிகாலை பிச்சாண்டவருக்கு அபிஷேகம், பவழக்கால் சப்பரத்தில் அம்மையாா் கோயிலுக்கு அமுதுண்ண செல்லும் விழாவும், மாலை அமுது படையலும் நடைபெறுகிறது. தொடா்ந்து, பிச்சாண்டவா் வீதியுலா நடைபெறுகிறது. அப்போது பக்தா்களை நோக்கி மாங்கனிகள் வீசப்படும். 3-ஆம் தேதி அதிகாலை அம்மையாருக்கு இறைவன் காட்சித்தரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவல் வாரியத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

SCROLL FOR NEXT