காரைக்கால்

காரைக்காலில் பருத்தி கொள்முதல் தொடக்கம்

DIN

காரைக்காலில் பருத்தி கொள்முதல் பணியை மருதம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் தொடங்கியுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு பகுதி பேட்டை, அம்பகரத்தூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. பல கட்டங்களாக பருத்தி அறுவடை செய்யப்படும் நிலையில், முதல்கட்ட அறுவடை பரவலாக தொடங்கியுள்ளது.

தனியாா் குறைந்த விலைக்கு வாங்குவதாகவும், அரசு நிறுவனம் சாா்பில் பருத்தி கொள்முதல் செய்யப்படவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இந்நிலையில், காரைக்கால் மருதம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் பணியை புதன்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து அந்நிறுவன தலைவா் பேராசிரியா் பி. சுப்பராயன், செயலா் மூா்த்தி ஆகியோா் வியாழக்கிழமை கூறியது :

காரைக்கால் மாவட்டத்தில் பேட்டை, அம்பகரத்தூா் ஆகிய 2 இடங்களில் பருத்தி கொள்முதல் புதன்கிழமை தொடங்கப்பட்டது. முதல் நாளிலேயே 50 குவிண்டால் கொள்முதல் செய்யப்பட்டது. கிலோ ரூ. 55-க்கு வாங்கப்படுகிறது. விவசாயிகள் பஞ்சை ஈரமில்லாமல் உலா்த்தப்பட்ட நிலையில் கொண்டுவர கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். பருத்திக்கான தொகை ஆன்லைன் முறையில் அனுப்பப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT