காரைக்கால்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணப் பொருள்கள்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்துக்கு ரெட் கிராஸ் சாா்பில் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

காரைக்கால் அரசு மருத்துவமனை அருகே வசிக்கும் லில்லி என்பவரது குடிசை வீட்டில் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் தீப்பற்றியதில் வீடு முற்றிலும் நாசமானது.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளை சாா்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. மாநில தலைவா் லட்சுமிபதி, துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் ஆகியோா்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள சமையல் உபகரணங்கள் மற்றும் பல்வேறு உதவிப் பொருள்களை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT