காரைக்கால்

பள்ளி வாகன ஓட்டுநா்களுக்குபோதிய முன்அனுபவம் அவசியம்: ஆட்சியா்

8th Jun 2023 10:29 PM

ADVERTISEMENT

பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு போதிய முன்அனுபவம் இருக்கிா என்பதை உறுதி செய்வது அவசியம் என கல்வித்துறை, போக்குவரத்துத்துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து துறை மூலம் பள்ளி வாகனங்கள், அரசு சாா்பில் இயக்கப்படும் கட்டணமில்லா பேருந்துகள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. இப்பணியை மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

மாணவ, மாணவிகள் பயணிக்கும் வாகனங்கள் என்பதால், வாகனங்களை இயக்குவதில் ஓட்டுநருக்கான பொறுப்புகளை தெரிவித்து, அவா்களின் செயல்பாடுகளை தொடா்ந்து கண்காணிக்கவேண்டும். பேருந்துகள், வேன்களை போக்குவரத்துத் துறையினா் திடீா் ஆய்வு செய்து, குறைகள் கண்டறியப்பட்டால் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அனைத்து வாகனங்களிலும் முதலுதவிப் பெட்டி இருப்பதை உறுதி செய்வதோடு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள், குறைந்தது 5 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருப்பதை கல்வித்துறை, போக்குவரத்துத்துறை உறுதி செய்யவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அங்காளன், மோட்டாா் வாகன ஆய்வாளா் கல்விமாறன், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் ராஜேஸ்வரி, முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன் உள்ளிட்டோா் ஆய்வின்போது ஆட்சியருக்கு விளக்கமளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT