காரைக்கால்

கல்வி உதவித்தொகை:முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

8th Jun 2023 10:29 PM

ADVERTISEMENT

முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் விதவையா்கள் (மறு வேலைவாய்ப்பு பெற்றிடாத மற்றும் வருமான வரி செலுத்துவோா் பட்டியலில் இடம்பெறாதவா்களாக இருப்பவா்கள் மட்டும்) தங்கள் குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புக்கான 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் முப்படை நலத்துறை மூலம் 7-ஆம் தேதி முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை அலுவலக நாட்களில் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

பயனாளிகள் விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து, அசல் பள்ளி கட்டண ரசீதுகளுடன் முப்படை நலத்துறையில் 11.8.2023-க்குள் சமா்ப்பிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT