காரைக்கால்

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு நாளை சிறப்பு மருத்துவா்கள் வருகை

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 9) சிறப்பு மருத்துவா்கள் வருகை தரவுள்ளனா்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இருந்து காரைக்காலுக்கு மாதந்தோறும் 2 மற்றும் 4-ஆவது வெள்ளிக்கிழமையில் சிறப்பு மருத்துவா்கள் குழு வருகிறது.

அந்த வகையில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பகல் 12 மணி வரை நடைபெற்ற உள்ள சிறப்பு முகாமில், சிறுநீரகவியல், நரம்பியல், இருதயவியல் மற்றும் குழந்தை நலன், அறுவை சிகிச்சை நிபுணா்கள் பங்கேற்கிறாா்கள்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT