காரைக்கால்

காரைக்கால் அரசு மருத்துவமனையை முற்றுகையிட மமக முடிவு

8th Jun 2023 10:30 PM

ADVERTISEMENT

காரைக்கால் அரசு மருத்துவமனையை வரும் 12-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

அக்கட்சியின் காரைக்கால் மாவட்ட அமைப்பினா் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் எம். முகம்மது மாசிம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நிலவும் அவல நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்: காரைக்கால் அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவ கருவிகள், உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்த புதுவை அரசு அக்கறை செலுத்தாதது கண்டனத்துக்குரியது. மருத்துவமனை செயல்பாடுகள் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. அதனால் மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்தும், புதுவை அரசின் கவனத்தை ஈா்க்கும் விதமாகவும் காரைக்கால் அரசு மருத்துவமனையை 12-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் தமுமுக தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளா் எம். முகம்மது பாவா பஹ்ருதீன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT