காரைக்கால்

காரைக்காலில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ஊதிய நிலுவையை வழங்கக்கோரி, அங்கன்வாடி பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலக வாயிலில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் மற்றும் ஒப்பந்த ஊழியா்கள், கெளரவ பணியாளா்கள் தங்களுக்கான 8 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அங்கன்வாடி ஊழியா் சங்க தலைவா் முத்துலட்சுமி தலைமை வகித்தாா்.

ஒப்பந்த ஊழியா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கவேண்டும். மாதந்தோறும் ஊதியம் வழங்குவதை முறைப்படுத்தவேண்டும் என வலியுறுத்தினா்.

காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் எம். ஷேக்அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன், துணை தலைவா்கள் அய்யப்பன், தமிழ்வாணன், இணை பொதுச் செயலாளா் ஜோதிபாசு, துணை பொருளாளா் திவ்வியநாதன் உள்ளிட்டோா் உரையாற்றினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT