காரைக்கால்

காரைக்காலில் நாளை ஜிப்மா் மருத்துவா்கள் சிறப்பு முகாம்

8th Jun 2023 10:31 PM

ADVERTISEMENT

காரைக்காலில் சனிக்கிழமை (ஜூன் 10) ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலா் பி. பாலு (எ) பக்கிரிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் இருந்து மருத்துவா்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலை 10 முதல் பகல் 12 மணி வரை பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதயவியல் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கிறாா்கள். பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்று பயனடையலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT