காரைக்கால்

மயான வளாக கட்டுமானப் பணிகள் ஆய்வு

DIN

காரைக்கால் அருகே பச்சூா் மயானக் கட்டடத்தை எரிவாயு தகன மேடை வசதியுடன் மேம்படுத்தும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

இந்த மயானக் கட்டடத்தில் ரூ.1.50 கோடியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பாா்வையிட்டாா். பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சிதம்பரநாதன், நகராட்சி செயற்பொறியாளா் லோகநாதன் ஆகியோா் பணிகள் நிலை குறித்து பேரவை உறுப்பினருக்கு விளக்கினா்.

இதுகுறித்து நாஜிம் கூறுகையில், பச்சூா் மயானம் பழைமையான கட்டட அமைப்பாகும். நவீன காலத்துக்கேற்ற வகையில் இதனை மேம்படுத்தும் விதமாக ரூ. 85 லட்சத்தில் எரிவாயு மூலம் சடலத்தை எரிக்கும் நவீன இயந்திரம் அமைக்கவும், ரூ. 60 லட்சத்தில் பழைய கட்டடம் புதுப்பிப்பு, விளக்குகள் அமைத்தல், குளத்தை மேம்படுத்துதல், குளியலுக்கான அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றன. அடுத்த 3 மாதத்துக்குள் ஒட்டுமொத்தப் பணிகளையும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது நிரவி - திருப்பட்டினம் தொகுதி பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT