காரைக்கால்

மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம்

DIN

திருநள்ளாறு அருகே உள்ள மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு கொம்யூன், அகரசேத்தூா் கிராமத்தில் உள்ள இக்கோயில் வருடாந்திர தீமிதி திருவிழா 6 நாள்கள் நடைபெற்றது.

விழா தொடக்கமாக கடந்த மாதம் 29-ஆம் தேதி இரவு பூச்சொரிதல் வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது.

தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் கோயில் வாயில் பகுதியில் அமைக்கப்பட்ட தீக்குண்டம் அருகே எழுந்தருளினாா்.

கரகம் மற்றும் அலகு காவடி சுமந்த பக்தா்கள் என ஏராளமானோா் தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

SCROLL FOR NEXT