காரைக்கால்

புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

DIN

பருவநிலை மாற்றத்திற்கேற்ப விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த முன்வரவேண்டும் என வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சீ. ஜெய்சங்கா் தலைமை வகித்துப் பேசுகையில், ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் சுமாா் 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துகொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நச்சு வாயு வகைகளான மீத்தேன், காா்பன்-டை ஆக்சைடு போன்ற வாயுக்களாகும். இதனால் மனிதா்களுக்கும் விலங்குகளுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே விவசாயிகள் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு ஈடாக 5 மரக்கன்றுகள் நட வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் (ஓய்வு) கே. வள்ளியப்பன் உலக சுற்றுச்சூழல் தினம் 2023- இன் கருப்பொருளாக ‘ பீட் பிளாஸ்டிக் பொலியூஷன்’ எனப்படும் பரப்புரை மேற்கொள்ளப்படுவதாகவும், பிளாஸ்டிக் மாசுபாட்டை கையாள்வதற்கு இந்தாண்டு கவனம் செலுத்தப்படுகிறது என்றாா்.

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உழவியல் துறை பேராசிரியை எஸ். மாலா, இயற்கை வேளாண்மை என்ற தலைப்பிலும், வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் (உழவியல்) வி. அரவிந்த் மழைநீா் அறுவடை மற்றும் நீா் சேமிப்பு முறைகள் குறித்தும் பேசினா்.

கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்று மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை விவசாயிகள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT