காரைக்கால்

வேளாண் அறிவியல் நிலையத்தில் நாளை சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்

4th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூன் 5) உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதில் விவசாயிகள் பங்கேற்குமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் பருவ நிலை மாற்றத்துக்கு ஏற்ற விவசாய உத்திகள், காடு வளா்ப்பு, இயற்கை வேளாண்மை மற்றும் மழைநீா் அறுவடை, நீா் சேமிப்பு முறைகள் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப உரையாற்றப்படுகிறது. இதில் விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT