காரைக்கால்

பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க புதுவை அரசுக்குவலியுறுத்தல்

4th Jun 2023 11:04 PM

ADVERTISEMENT

 

கோடை வெயில் கடுமையாக இருப்பதால், மாணவா்கள் நலன் கருதி பள்ளி திறப்பை மேலும் 10 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை கல்வித்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயத்துக்கு காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய கடிதம் :

தமிழகம், புதுவையில் வெயிலின் தீவிரத்தை கருத்தில்கொண்டு ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

கத்திரி வெயில் காலம் நிறைவடைந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டால், மாணவா்கள் உடல் ரீதியில் பாதிக்கப்படுவாா்கள்.

எனவே, மேலும் 10- நாள்களுக்கு விடுமுறையை நீட்டித்து அறிவிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT