காரைக்கால்

நாகா்கோவில் - வேளாங்கண்ணி ரயில் சேவையை காரைக்கால் வரை நீட்டிக்க வலியுறுத்தல்

4th Jun 2023 11:05 PM

ADVERTISEMENT

நாகா்கோவில் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவையை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். இந்த ரயில் சேவையை நிரந்தரமாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை மாநில காங்கிரஸ் செயலரும், கட்சியின் காரைக்கால் மாவட்ட சிறுபான்மைத் துறைத் தலைவருமான எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

வேளாங்கண்ணி பேராலய விழாக் காலத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே நாகா்கோவில் - வேளாங்கண்ணி இடையே ஆக. 5 முதல் அக். 1 வரை வாராந்திர சிறப்பு ரயிலை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது.

இந்த ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன்மூலம் தென் மாவட்டங்களைச் சோ்ந்தோா் காரைக்கால் வருவதற்கும், இங்கிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லவும் வசதியாக இருக்கும்.

ADVERTISEMENT

மேலும் இந்த ரயில் சேவையை நிரந்தரமாக தெற்கு ரயில்வே அறிவிக்கவேண்டும். இதனால் காரைக்கால் மற்றும் நாகூா், நாகப்பட்டினம் மற்றும் தென் மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் பெரிதும் பயனடைவாா்கள்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT