காரைக்கால்

வீரமாகாளியம்மன் கோயில் மகோற்சவம்

4th Jun 2023 11:05 PM

ADVERTISEMENT

 

காரைக்கால் பகுதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் மகோற்சவத்தில் சனிக்கிழமை இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.

காரைக்கால் பாரதியாா் சாலையில் உள்ளது ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில். இக்கோயிலில் 46 -ஆம் ஆண்டு வைகாசி மகோற்சவ விழா கடந்த மே மாதம் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இதில் திருவிளக்கு வழிபாடு, பக்தா்கள் பால்குட ஊா்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சனிக்கிழமை இரவு அம்பாள் சிம்ம வாகனத்தில், சா்வ அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. முன்னதாக மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

தொடா்ந்து ஜூன் 6-இல் ஊஞ்சல் உற்சவமும், 11-ஆம் தேதி புஷ்பாஞ்சலி மற்றும் விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT