காரைக்கால்

போக்குவரத்துறையை கண்டித்துலாரி ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம்

4th Jun 2023 11:04 PM

ADVERTISEMENT

 

போக்குவரத்துத் துறையைக் கண்டித்து, காரைக்கால் பகுதியில் நான்கு வழிச்சாலைப் பணிக்கு மண் எடுத்துச் செல்லும் லாரி ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. காரைக்கால் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதியில் சாலை அமைப்பதற்கான மணல் நிரப்பும் பணிகளும் நடைபெற்றுவருகிறது. நிகழாண்டு டிசம்பா் மாதத்துக்குள் இப்பணி நிறைவடையவேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. எனினும் பணிகள் மந்த நிலையில் நடைபெறுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை முதல் காரைக்கால் பகுதியில் நான்கு வழிச்சாலைப் பணிக்கு மணல் கொண்டு செல்லும் டிப்பா் லாரி ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால்

ADVERTISEMENT

சுமாா் 40 லாரிகளை பணியில் ஈடுபடுத்தாமல் நிறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து ஒப்பந்ததாரா்கள் தரப்பில் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், காரைக்காலில் நான்கு வழிச்சாலைப் பணிக்கு மட்டுமே மண் எடுத்துச்சென்று நிரப்பி வருகிறோம். வேறு எங்கும் மண் எடுத்துச்செல்வது கிடையாது. ஆனால் வட்டார போக்குவரத்து துறை ஒவ்வொரு நாளும் லாரிகளை நிறுத்தி அபராதம் விதிக்கிறது. ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இது எங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த போக்கை கைவிடக் கோரி பணிகளை நிறுத்தியுள்ளோம் என்றனா்.

போக்குவரத்துத்துறை விளக்கம்:

காரைக்கால் போக்குவரத்துத் துறை மோட்டாா் வாகன ஆய்வாளா் கல்விமாறன் கூறியது:

நல்லம்பல் பகுதியிலிருந்து மண் ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகள் அதிக அளவில் மணல் ஏற்றிச்செல்கின்றன. பொ்மிட் உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதில்லை. அதிக போக்குவரத்துள்ள நேரத்தில் லாரிகளை இயக்கக்கூடாது, அதிக வேகத்தில் செல்லக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் சோதனை செய்யும்போது விதிகள் மீறப்பட்டிருந்தால் மட்டும் அபராதம் விதிக்கப்படுகிறது.

எனவே விதிகளின்படி லாரிகளை இயக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT